எல்.ஐ.சி., ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் எனப்படும் எல்.ஐ.சி., எச்.எப்.எல்., நிறுவனம் வீட்டுக் கடன் துறையில் முக்கிய நிறுவனங்களுள் முன்னணி நிறுவனமாகும். காப்பீட்டுத் துறையில் பிரசித்தி பெற்ற எல்.ஐ.சி., நிறுவனத்தில் துணை நிறுவனமான எல்.ஐ.சி., எச்.எப்.எல்., நிறுவனம் 1989ல் நிறுவப்பட்டது. 150 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் உதவி மேலாளர் இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரங்கள்: எல்.ஐ.சி., எச்.எப்.எல்.,நிறுவனத்தில் உதவியாளர் பிரிவில் 200 இடங்களும், துணை மேலாளர் பிரிவில் 93 இடங்களும் காலியாக உள்ளன. இவற்றில் உதவியாளர் பிரிவில் தமிழகத்தில் 30 காலியிடங்கள் அடங்கும். உதவி மேலாளர் பணியிடங்கள் அகில இந்திய அளவிலான தேர்ச்சி முறைக்கு உட்பட்டது எனத் தெரிகிறது.
வயது : எல்.ஐ.சி., எச்.எப்.எல்.,லின் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். மேலும், கடந்த செப்டம்பர் மாதம் ஐ.பி.பி.எஸ்., அமைப்பு நடத்திய RRB - CWE - III தேர்வுகளில் வெற்றிகரமாகத் தேர்ச்சி பெற்றவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
முழுமையான விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.
தேர்ச்சி முறை: ஐ.பி.பி.எஸ்., மதிப்பெண் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது.
விண்ணப்பக் கட்டணம்: இரண்டு பதவிகளுக்குமே தலா ரூ.150/- விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 30.04.2015
இணையதள முகவரி: www.lichousing.com/currjobsdtls.php

No comments:
Post a Comment