Saturday 13 June 2015

மத்திய தொலைத்தொடர்பு பொறியியல் கன்சல்டன்ட் கழகத்தில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணி

இந்திய அரசின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொலைத்தொடர்பு பொறியியல் கன்சல்டன்ட் கழக்ததில் ஒப்பந்த அடிப்படையிலான டேட்டா என்ட்ரி அப்ரேட்டர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Data Entry Operator
மொத்த காலியிடங்கள்: 59
பட்டதாரிகளுக்கு காலியிடங்கள்: 47
சம்பளம்: மாதம் ரூ.11,986 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டம் வணிகவியல் துறையில் பெற்றிருந்தால் விரும்பத்தக்கது. மேலும் கணினியில் புலமை உடையராகவும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பிளஸ் 2 -க்கான காலியிடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூ.10,998 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தங்களின் பயோடேட்டா, சுய சான்று செய்யப்பட்ட கல்வி சான்றிதழ் நகல்கள், அனுபவ சான்றிதழ், இரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து அனுப்ப வேண்டும்.
பதிவுக் கட்டணம்: ரூ.300. இதனை BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED, NEW DELHI  என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவுக் கட்டணம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.06.2015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: BECIL's Corporate Office, C-56/A-17, Sector-62, Noida-201307.

No comments:

Post a Comment